Friday 10 April 2015

Auditing Colleges


பிரகாசமான எதிர்காலத்திற்கு காஸ்ட் அக்கவுன்டிங் படிப்பு...

காஸ்ட் அக்கவுன்டிங் என்கிற இந்த படிப்பு பற்றி பலருக்கும் தெரிவதில்லை. எல்லா நிறுவனங்களுக்கும் ஆடிட்டிங் முக்கியம் என்கிற மாதிரி தொழிற்துறைக்கு காஸ்ட் அக்கவுன்டிங் முக்கியம். ஒரு பொருளை தயாரிக்க ஆகும் செலவுகள், அதற்கான முதலீட்டு ஆதாயங்களைப் பற்றி நிறுவனங்களுக்குத் தெரிவிப்பது காஸ்ட் அக்கவுன்டன்டின் முக்கிய பணி.
''இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அண்ட் வொர்க் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா’ என்பது கொல்கத்தாவில் இருக்கிறது. இதன் மூலமாகத்தான் இந்த படிப்பை படிக்க முடியும். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் இந்த இன்ஸ்டிடியூட்டில் விண்ணப்பித்து படிப்பைத் தொடங்கலாம். ஒவ்வொரு வருடமும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் மட்டும் தேர்வு நடைபெறும். வருடத்தில் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் இந்த படிப்பை படிக்க விண்ணப்பிக்கலாம். ஆனால், ஜூன் மற்றும் டிசம்பரில்தான் தேர்வு எழுத முடியும்.

இந்த படிப்பில் மூன்று நிலை உள்ளன. ஃபவுண்டேஷன், இன்டெர்மீடியேட், ஃபைனல் ஸ்டேஜ் என இந்த மூன்று நிலைகளை ஒவ்வொன்றாக முடிக்க வேண்டும். சி.ஏ. படிப்பில் வரக்கூடிய காஸ்டிங், அக்கவுன்ட்ஸ், வரி மற்றும் சட்டப் படிப்புகள் இந்தப் படிப்பிலும் இருக்கிறது. பி.எஸ்.சி., இன்ஜினீயரிங் என எந்த இளநிலை பட்டம் முடித்தவர்களும் இந்த காஸ்ட் அக்கவுன்டிங் படிப்பை படிக்கலாம். இளநிலை பட்டம் பெற்றவர்கள் நேரடியாக இன்டெர்மீடியேட் நிலைக்குப் போகலாம். அவர்கள் ஃபவுண்டேஷன் நிலை படிக்க வேண்டியதில்லை.

இந்தியா முழுவதும் ஐந்து லட்சம் மாணவர்கள் இந்த படிப்பை படிக்கிறார்கள். ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி அடைகிறார்கள். காரணம், இந்த படிப்பின் கடினமான தன்மையே. இன்டெர்மீடியேட் நிலையில், இரண்டு குரூப் இருக்கிறது. இந்த குரூப்பில் மூன்று பேப்பர்கள் இருக்கும். இந்த மூன்று பேப்பர்களிலும் தலா 40 மதிப்பெண் குறைந்தபட்சமாகவும், மூன்று பேப்பரின் மதிப்பெண்னை கூட்டினால் 150 மதிப்பெண்களும் வர வேண்டும்.

இந்த இரண்டு கண்டிஷனில் ஒன்று தவறினாலும் அந்த குரூப் பேப்பர்கள் அனைத்தையும் எழுத வேண்டும். இப்படிதான் ஃபைனல் நிலையும் இருக்கும். இந்த தேர்வை ஏன் இப்படி கடினமாக வைத்திருக்கிறார்கள்? ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்யக்கூடிய திறன் படைத்தவர்களால்தான் திறமையான காஸ்ட் அக்கவுன்ட்டன்ட்-ஆக பணிபுரிய முடியும். அதற்கு தகுந்த வகையில் மாணவர்களை தயார்படுத்துகின்றனர். இந்த தேர்வுக்கு ஐ.சி.டபிள்யூ.ஏ. இன்ஸ்டிடியூட் மூலமாகவும், நேஷனல் மேனேஜ்மென்ட் கல்லூரி மூலமாகவும் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். இறுதித் தேர்வு முடிந்து தேர்ச்சியடைந்த பின்பு ஐ.சி.டபிள்யூ.ஏ. உறுப்பினராக பதிவு செய்துகொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு :

இந்தியாவில் சுமார் எட்டு லட்சம் நிறுவனங்கள் இருக்கிறது. ஆனால், குறைந்தளவிலேயே காஸ்ட் அக்கவுன்ட்டன்டுகள் இருக்கிறார்கள். இந்த படிப்பை முடித்தவர்கள் வேலைக்கும் போகலாம் அல்லது சொந்தமாக காஸ்ட் அக்கவுன்டிங் பிராக்டீஸ் செய்யலாம். வேலைக்குப் போக நினைக்கிறவர்கள் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களில் ஃபைனான்ஸ், டிரஷரி, பட்ஜெட்டிங், காஸ்டிங், ஃபாரக்ஸ் மேனேஜ்மென்ட், இன்டெர்னல் ஆடிட்டிங் போன்ற வேலைகளுக்குச் செல்லலாம்.

காஸ்ட் அக்கவுன்டிங் படிப்பு குறித்து கூடுதல் விவரங்கள் அறிய : http://goo.gl/WsJOjy

For More Details

NATIONAL MANAGEMENT COLLEGE, Thudupathi, Perundurai, Erode(Dt).

Contact: 90958 08804, 97885 56999.

கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பு

கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பு எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது?
இன்ஸ்டிட்யூட் ஆஃப்கம்பெனி செக்ரட்டரிஸ் ஆஃப் இந்தியா கல்வி நிலையம், இந்திய நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டதாகும்.மத்திய அரசின் கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இது செயல்படுகிறது. இதன்தலைமை அலுவலகம் தில்லியில் உள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் தில்லியில் மண்டலஅலுவலகங்களும், 69 கிளை அலுவலகங்களும் உள்ளன.

ரூ. 5 கோடியும் அதற்கு மேலும் மூலதனம் செய்யப்பட்டுஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் கட்டாயம் ஒரு கம்பெனி செக்ரட்டரியை நியமிக்கவேண்டும் என்பது இந்திய கம்பெனி சட்ட விதி. அதுபோல பங்குச் சந்தையில் தங்கள்நிறுவனங்களை பதிவு செய்துள்ள அனைத்து நிறுவனங்களும் கண்டிப்பாக கம்பெனிசெக்ரட்டரியை நியமிக்க வேண்டும். இந்தப் பதவிக்கு வேறு படிப்பு படித்தவர்களைநியமிக்கக் கூடாது. இந்தப் பதவியில் அமர கண்டிப்பாக ஏ.சி.எஸ். என்று அழைக்கப்படும்அசோசியேட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்பு படித்திருக்க வேண்டும்.

இந்தப் படிப்பு படித்தவர்கள்ஒரு நிறுவனத்தில் என்ன பணியில் அமர்வார்கள்?
சி.எஸ். கோர்ஸ் முடித்துகம்பெனியில் கம்பெனி செக்ரட்டரி பதவியில் அமரும் ஒருவர் படிப்படியாக, நிர்வாக இயக்குனர், கம்பெனியின் தலைவர் பதவியில் அமர முடியும்.இதுதவிர கம்பெனி ஆரம்பித்தல், கம்பெனிகள் பல்வேறு துறைகளில் சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்தல், கம்பெனி நீதிமன்றங்களில் ஆஜராக்குதல் போன்றபல்வேறு பணிகளை செய்தலில் ஒரு கம்பெனி செக்ரட்டரியின் பணி முக்கியத்துவம்வாய்ந்தது.

சி.எஸ். படிப்பில் சேரஅடிப்படை கல்வித் தகுதி என்ன?

பிளஸ் டூபடித்திருந்தாலே போதுமானது. பிளஸ் டூ வகுப்பில் எந்தப் பிரிவு எடுத்துப் படித்தமாணவர்களும் இதில் சேரலாம்.

சி.எஸ். படிப்பைபொருத்தவரை ஆரம்ப நிலை (ஃபவுண்டேஷன் புரோகிராம்), நிர்வாக நிலை (எக்ஸிகியூடிவ் புரோகிராம்), தொழில்முறை நிலை (புரபஷனல் புரோகிராம்) என்ற மூன்று படிகள் (stages) உண்டு. இதில் பிளஸ் டூ படித்து முடித்து வரும்மாணவர்கள் கண்டிப்பாக ஃபவுண்டேஷன் புரோகிராமில் படித்து முடித்த பிறகுதான் நிர்வாகநிலையில் சேர முடியும். இதுவே ஒரு மாணவர் இளநிலைப் பட்டப் படிப்புமுடித்திருக்கும் பட்சத்தில் அவர் நேரடியாக நிர்வாக நிலையில் படிப்பைத் தொடரலாம்.நிர்வாக நிலையில் தேர்ச்சிப் பெற்றால்தான் தொழில்முறை நிலையில் சேர முடியும்.
இளநிலை பட்டப் படிப்பில்வணிகப்பிரிவும், முதுநிலைப் பட்டப் படிப்பில் கார்ப்பரேட்செக்ரட்டரிஷிப் பிரிவும் எடுத்து தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு நிர்வாகநிலைப்பிரிவில் 3 தாள்கள் விலக்கு அளிக்கப்படுகிறது.
பொதுவாக நிர்வாகநிலைப்பிரிவில் தேர்வு எழுதும் மாணவர்கள் 6 தாள்களை எதிர்கொள்ள வேண்டும் ரூ.5கோடிக்கு குறைவாக முதலீடு செய்து நடத்தப்படும்நிறுவனத்தில் நிர்வாக நிலையில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் பணியில்சேர்ந்துகொள்ளலாம்.

இந்தப் படிப்பில்சேருவதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது. ஆனால், குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியாகியிருக்கவேண்டும். இந்தியா முழுவதும் இந்தப்படிப்பில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் சேருகிறார்கள். ஆனால், இதில் முழுவதும் தேர்ச்சி பெறும் மாணவர்கள் வெறும்இரண்டாயிரம் மட்டுமே.

இந்தப்படிப்புக்கு வேலைவாய்ப்பு எப்படி?

சென்னை மண்டலத்தைப்பொருத்தவரை மொத்தம் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கேம்பஸ்இன்டர்வியூவில் பங்கு கொள்கின்றன. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாயிலிருந்து7 லட்ச ரூபாய் வரை ஊதியத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 7 லட்சம் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், 30 ஆயிரம் கம்பெனி செக்ரட்டரி மட்டுமே பணியாற்றுகிறார்கள்.அப்படியானால், இந்தப் பணிக்கான நபர்களின் தேவையை நீங்களேகணக்கிட்டுக்கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல், 2015ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 5,000 நிறுவனங்கள் கிராமப்புறத் திட்டத்தின் கீழ் திறக்கப்படஉள்ளன. ஒவ்வொரு நிறுவனத்திலும் கண்டிப்பாக ஒரு கம்பெனி செக்ரட்டரி நியமிக்கப்படவேண்டியிருப்பதால், இந்தப் படிப்புக்கான தேவை இன்று இருப்பதைவிட எதிர்காலத்தில்இன்னும் அதிகமாக இருக்கும்.

இந்த படிப்பு பற்றிய கூடுதல் விவரங்கள் அறிய : http://goo.gl/AkvFP6

தொடர்புக்கு : 90958 08804, 97885 56999.